- Get link
- Other Apps
- Get link
- Other Apps
10 வயது ஆண் குழந்தைகளுக்கு எவ்வாறெல்லாம் அறிவுரை கூறலாம்?
அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?
🌹பதில்🌹
குழந்தைகளுக்கு பொறுப்பாளிகள் அவர்களின் பெற்றோர்களே!
அதிலும் குறிப்பாக தாய் மிகவும் பொறுப்பாளி ஆவாள்.,
நாம் ஒவ்வொருவரும் நமக்கு அளித்த பொறுப்பைப் பற்றி அல்லாஹ்விடத்தில் பதில் கூறவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.
இந்த கேள்வியில் குறிப்பாக 10 வயது குழந்தைகளுக்கான அறிவுரை என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை வளரும் போது,அதற்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களை விட பார்த்து பழகும் விஷயங்கள் தான் அடிமனதில் ஆழமாக பதிகிறது.
உதாரணமாக, குழந்தை தன் தந்தையை சிறிய வயதிலிருந்தே யாரும் சொல்லி கொடுக்காமலேயே வாங்க,போங்க என்றும்,தன் தாயை வா,போ என்றும் அழைக்கும்.,இதன் காரனத்தை யோசித்து பார்த்தால் அந்த குழந்தையின் தாய் தன் கணவனை வாங்க, போங்க என்று அழைப்பதும்,கணவன் தன் மனைவியை வா,போ என்று அழைப்பதுதான் காரணம்.
வீட்டில் உணவு தாயிடம்தான் கேட்க வேண்டும், வெளியில் உள்ள பொருத்களை தந்தையிடம் தான் கேட்க வேண்டும் என,குழந்தைகளுக்கு எப்படி தெரிகிறது??
அது வீட்டில் உள்ள நம் பழக்கவழக்கங்களை பார்த்துதானே கற்றுக் கொள்கிறது.
எனவே,குழந்தைகளை எப்படி வளர்க்க நாம் ஆசைப்படுகிறோமொ? அப்படி நாம் முதலில் நடக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளை எதற்காகவும் அடிக்க அனுமதிக்கவில்லை,தொழவைக்கத் தவிர!
10 வயது எட்டிவிட்ட குழந்தைகள் தொழவைக்க லேசாக அடிக்கலாம்.
தொழ பழகிவிட்டார்களானால் மற்ற அனைத்து நல்ல குணங்களும் தானே வந்து விடும்.
பெற்றோர்கள் குழந்தைகள் முன் எந்த வித சண்டை,சச்சரவுகள் செய்யக் கூடாது.,
ஏனெனில் நாம் செய்யும் இந்த செயல்களால், அந்த குழந்தைகள் வீட்டை வெறுக்கும் சூழ்நிலை ஏற்படும்,அதுமட்டுமன்றி தானும் எதிர்காலத்தில் தன் மனைவியிடம் இப்படி நடந்துவிட ஏதுவாக அமைந்துவிடும்.
அதே போல் வீட்டில் உள்ள பெரியவர்களையோ,வீட்டிற்கு வரும் விருந்தினர், நன்பர்களையோ அவர்களது தவறான விஷயங்களை பற்றி குழந்தைகள் முன் விமர்சிக்க கூடாது,ஏனெனில் இதுவே இவர்கள் மற்றவர்களை மதிக்காததற்க்கு காரணமாகிவிடும்.
அதேபோல் நமக்கு பிடிக்காதவர்கள் வீட்டிற்கு வந்தால் இல்லையென்று சொல்,போன்ற விஷயங்கள் அந்த குழந்தைகளுக்கு பொய் கற்றுக் கொடுப்பதாகிவிடும்.எனவே இது போன்ற விஷயங்களை குழந்தைகள் முன் செய்வது கூடாது.
ஆண் குழந்தைகள் முன் பெண் குழந்தைகளை கன்னியமாக நடத்த வேண்டும், அப்போது தான் பெண்களை மதிக்கும் குணம் ஆண் குழந்தைகளுக்கு மனதில் பதியும்.,
ஆண் குழந்தைகளை கடைக்கோ இல்லை வேறு ஏதாவது வேலைக்கோ அனுப்பும் போது, நீ போய் வா! நான் சாக்லைட் தறுகிறேன் அல்லது உனக்கு பிடித்த வேறு ஏதேனும் தருகிறேன் என்றெல்லாம் கூறக்கூடாது.,இப்படி கூறினால் எதைச் செய்தாலும் குழந்தைகள் பலனை எதிர்பார்க்கும்.இல்லையென்றால் மிகுந்த கோபப்படும், இத்தகைய குணம்தான் பிற்காலத்தில் தாயை கவனிக்காத ஒரு சூழ்நிலையில் கொண்டு சேர்க்கிறது.,
அதற்கு வேண்டும் என்ற பொருட்களை நிபந்தனையின்றி கொடுக்க வேண்டும்.
நல்ல விஷயங்களை செய்தால் ஊக்கப்படுத்தும் விதமாக பரிசுகள் அளிக்கலாம்.
தாயும்,தகப்பனும் குழந்தைகள் விஷயத்தில் ஒருபோதும் முரண் படாதீர்கள்,யார் அந்த குழந்தைகள் ஆதரவாக பேசுகிறாரோ அவர்களின் பக்கம் சாய்ந்து விடும்.,மதிப்பு நம் மீது குறைவதற்கு இதுவே காரணமாகிவிடும்.,
எனவே அந்தக் குழந்தைகள் கேட்கும் விஷயங்களை இருவரும் தனியாக பேசிவிட்டு இருவரும் ஒருமித்த கருத்தை சொல்ல வேண்டும்.
குழந்தைகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்,இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்.,
பெரிய அறிஞர்களானாலும் உங்களை விட அவர் நன்றாக பேசினார் என்றால்,அவர்களுக்கே கோபம் வரும் என்றால் குழந்தைகள் எவ்வளவு வருத்தப்படும் என்று சிந்தித்து செயல் பட வேண்டும்.
இந்த விஷயங்களை நேரடியாக, மென்மையாக ஒப்பிடாமல் சுட்டிக்காட்ட வேண்டும்.,
எனவே இன்ஷா அல்லாஹ் குழந்தைகளுக்கு நாம் முன்னுதாரணமாக இருந்து செயல்பட வேண்டும். இன்ஷா அல்லாஹ்
📚📖ஆதாரங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
📕5351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும். என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்: நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், “இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?“) என்று கேட்டதற்கு, அவர்கள் “நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)“ என்று பதிலளித்தார்கள்.3
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 69. (குடும்பச்) செலவுகள்
நூல் : அஹ்மத் (10202)
📕
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنكُمْ ثَلَاثَ مَرَّاتٍ ۚ مِّن قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُم مِّنَ الظَّهِيرَةِ وَمِن بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ۚ ثَلَاثُ عَوْرَاتٍ لَّكُمْ ۚ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ۚ طَوَّافُونَ عَلَيْكُم بَعْضُكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ ﴿24:58﴾
24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
📕
لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ ۖ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا ﴿65:7﴾
65:7. தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை)
உண்டாக்கியருள்வான்.
📕
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ ﴿8:28﴾
8:28. “நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
📕”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல,எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (1359)
Comments
Post a Comment