கற்பனை கவிதைகள் அல்லது பாடல்கள் ஷிர்க் இல்லாமல் எழுதலாமா? பாடமாலாமா?

 


கற்பனை கவிதைகள் அல்லது பாடல்கள் ஷிர்க் இல்லாமல் எழுதலாமா? பாடமாலாமா?


🌷பதில்🌷


   கற்பனை கவிதைகளை ஷிர்க் இல்லாமல் தாராளமாக எழுதலாம்.,ஆனால் பாடல்களுக்கு அனுமதி கிடையாது.


ஆனால் கவிதை எழுதும்போது அதில் கற்பனை இருந்தாலும் பொய் கலக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.


மார்க்கத்தில் கவிஞர்களையும்,கவிதைகளையும் சில இடங்களில் தடுத்திருப்பது பொய்யாக கற்பனை செய்யப்பட்ட கவிதைகளுக்குத்தான்.


இன்னும் சொல்லப்போனால் கவிதை நடையில் ஒரு விஷயத்தை சொல்லும்போது அது மக்கள் மனதில் மிக எளிதாக சென்றடையும்.

எனவே அழகிய கவிதை வடிவில் மார்க்கவிஷயங்களை சொல்லுவது அனுமதிக்கப்பட்டதே!


ஆனால் அதற்கு மெட்டு போடுவது கூடாது.ஏனெனில் அதில் நல்ல கருத்துகள் இருந்தாலும் அது நம் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத  இசைக்கு கொண்டு போய்விடும் என்பதால்..


📚📖ஆதாரங்கள்


📕

وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَ‏ 

இன்னும் புலவர்கள் (எத்தகையோரென்றால்) அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள்.

(அல்குர்ஆன் : 26:224)


📕6154. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“  உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 78. நற்பண்புகள்


📕1155. ஹைஸம் இப்னு அபீ ஸினான் அறிவித்தார்.  அபூ ஹுரைரா(ரலி) தம் உரையின்போது நபி(ஸல்) அவர்கள் பற்றி அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) இயற்றிய பின்வரும் கவிதையை எடுத்துக் கூறினார்கள்.  “எங்களிடம் இறைத்தூதர் இருக்கிறார்கள். ஃபஜ்ரு நேரம் வந்ததும் அவனுடைய வேதத்தை அவர்கள் ஓதுகிறார்கள். நாங்கள் வழிகேட்டில் இருந்த பின் எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நடந்தேறும் என்று எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணை வைப்பவர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்


=========================




Comments