தாய் செய்ய தவறுகளை தட்டிக்கேட்காத கணவனுடன் வாழலாமா?

 


மகன் தன் தாயிடம் இஸ்லாம் கூறிய வழியில் மிகவும் கண்ணியமான முறையில் நடக்கிறார்.

ஆனால் அந்த தாய் மகனை திசைதிருப்பி மருமகளிடம் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்.

தாய் செய்ய தவறுகளை தட்டிக்கேட்காத கணவனுடன் வாழலாமா?


🌷பதில்🌷


   இது ஒரு குடும்பத்தில் மகன்,மருமகள், மாமியார் மூன்றுபேர் சம்பந்தப்பட்ட பிரச்சினை,


இது குடும்பப் பிரச்சினை ஆதலால்,இதன் தெளிவான முடிவை சொல்லமுடியாது, மூன்று பேரிடமும் பேசிதான் ஒரு முடிவுக்கு வரமுடியும்.,ஒருவரின் வாதத்தை வைத்து மட்டும் தீர்ப்பளிப்பது இஸ்லாமிய அறிஞர்களுக்கு அழகல்ல.


ஆனாலும்,இது தொடர்பான பொதுவான கருத்துக்களை இங்கு கூறுகிறோம்.

 

இஸ்லாமை பொறுத்தவரை ஆண்கள் பெண்களை நிர்வகிக்கிறார்கள் மற்றும் பெண்கள் கணவருக்கு கட்டுப்பட வேண்டும் எனும் அடிப்படையிலும்,நாம் தான் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொறுப்பாளி எனும் அடிப்படையிலும் அவர்களிடம் அனுசரித்து விட்டுக்கொடுத்தல் அழகான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.


ஆனாலும் அவர் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகள் செய்துவந்தால் நாம் நேரிடையாக கணவர் முன்,அவர் தாயை உட்காரவைத்து பேசுவது கணவர் நம்மை புரிந்து கொள்ள உதவும்.


ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இது.,முதலில் இவர்கள் செய்யும் காரணத்தை சிந்தித்து பார்க்கவேண்டும்,, ஏன்? இவ்வளவு காலம் தன்மீது மட்டும் காட்டிய பாசத்தை பங்கு போட ஒரு பெண் வந்து விட்டால் ஏற்படும் பொறாமைதான்,ஆனால் இந்த பொறாமையின் காரணத்தில்தான் இப்படியான விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.


அதை புரிந்து கொண்டு,முடிந்தளவு பேசி தீர்க்கவேண்டும்,இல்லையெனில் பொது ஆட்களை வைத்து பேசி தீர்க்கலாம்.


ஏனெனில், கணவர் இக்கட்டான நிலையில் உள்ளார்,தாயை கைவிட்டாலும் அல்லாஹ்விடத்தில் பதில் கூறவேண்டும்.,மனைவியின் பொறுப்புக்காகவும் பதில் கூறவேண்டும்.


ஆனாலும்,உங்கள் மீது ஞாயமுள்ள பட்சத்தில் அவர்களிடம் பேசியும்,பொது ஆட்களிடம் பேசியும் பயனில்லை எனில் அல்லாஹ்விடத்தில் பொறுப்பை சாட்டிவிட்டு அமைதிகாத்தல் நம் குழந்தைகளுக்கு நலமாக அமையும்.


இத்தனை விஷயங்களையும் மீறி பொறுக்க இயலாமல் போனால் நாம்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டும்.


இன்று நாம் பெரிதாக நினைத்த எவ்வளவோ பிரச்சனைகள் நாளை காணாமல் போகும்,

எனவே,வாழ்வதற்கு எடுக்கப்படும் முடிவு அவர்களுடைய தனிப்பட்ட முடிவு எனினும் பொறுமையாக, நிதானமாக முடிவெடுப்பது நலம்


அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்., உண்மை வெளிவராது போகாது.,நம்மீது தவறு இருப்பினும் ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும்.


இஸ்லாமின் அடிப்படைகளை அந்த தாயிற்கு எத்தி வையுங்கள்,

இஸ்லாமை பொறுத்தவரை அவரவர்கள் செய்யும் செயலுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு,அவர் செய்த செயலுக்குண்டான ஒன்றை அல்லாஹ்விடத்தில் அவர் பெற்றுக்கொள்வார்.,

நாம் செய்யாத தவறுகளுக்கு நம்மை வருத்திக்கொண்டு நம் வாழ்க்கையை நாம் ஏன் தொலைக்கவேண்டும்?

சிந்தித்து சரியான முடிவை எடுக்க வேண்டும்.


📚📖ஆதாரங்கள்


📓

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ  بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا  بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ 

முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

(அல்குர்ஆன் : 49:6)


📓

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌  ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.

(அல்குர்ஆன் : 4:59)



وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَ اِلَىَّ الْمَصِيْرُ‏ 

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

(அல்குர்ஆன் : 31:14)


📓

وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏ 

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,

(அல்குர்ஆன் : 90:3)


📓

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا  ﴿17:23﴾

17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!


நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றல்ல) நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.(அர்ரூம் 30:21)


📓உலகம் அனைத்தும் ஒரு செல்வம். அந்தச் செல்வத்திலேயே மிகச் சிறந்த செல்வம், நல்லொழுக்கமுள்ள ஒரு பெண்ணாவாள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)


📓ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழர் மனைவி நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதரியாவார்.) ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.


அதாவது, நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை, தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது, நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால், எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.


அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி, ”நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவரைத் தலாக் சொல்லிவிடு!” என்று கூறி விட்டார்கள்.


ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில், அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது, ”அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ, குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும், அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரி)


📓ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள். காரணம், அவர்களில் (ஆண்கள், பெண்களில்) சிலரை (ஆண்களை) சிலரைவிட (பெண்களைவிட) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். மேலும் ஆண்கள் தங்கள் பொருள்களை(ப் பெண்களுக்கு)ச் செலவு செய்கின்றனர்.(அன்னிஸா 4:34)


4052. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்.  என்னிடம் இறைத்தூதர்(ஸல்)அவர்கள், “திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே!” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று கூறினேன். “கன்னி கழிந்த பெண்ணையாக? கன்னிப் பெண்ணையா?“ என்று கேட்டார்கள். நான், “(கன்னிப் பெண்ணை) அல்ல கன்னி கழிந்த பெண்ணைத்தான் (மணந்தேன்)” என்று கூறினேன். “உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா?“ என்று கேட்டார்கள். நான், “இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் – ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், “நீ செய்தது சரிதான்” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன” (அல்குர்ஆன் 2:228) 


📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல்: புகாரி 2554


Comments